ella ulagamum

எல்லா உலகமும் ஆனாய், நீயே!
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே!
நல்லாரை நன்மை அறிவாய் நீயே!
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே!
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே!
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே!
செல்வாய செல்வம் தருவாய் நீயே!
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ!