silanthiyum

சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற்பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானுமாகக்
கலந்த நீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித் திட்டார் குறுக்கை வீரட்டனாரே