உற்று இருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே!
உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே!
சுற்று இருந்த கலைஞானம் ஆனாய் நீயே!
கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே!
பெற்று இருந்த தாய் அவளின் நல்லாய் நீயே!
பிரனாய், அடி, என்மேல் வைத்தாய் நீயே!
செற்று இருந்த திருநீலகண்டன் நீயே!
திருவையாறு அகவாத செம்பொன் சோதீ