பணிந்தவர் அருவினை பற்றுஅறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர்---அம் தண் ஐயாறே.
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ்இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தா