புலன்ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி,
அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்தபோதுஆக, அஞ்சேல்! என்று
அருள்செய்வான் அமரும் கோயில்---
வலம்வந்த மடவார்கள் நடம்ஆட,
முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி,
முகில் பார்க்கும் திரு ஐயாறே