veiyuru tholipangkan

கோளறு பதிகம் - வேய்உறு தோளிபங்கன்
வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியார‌ வர்க்கு மிகவே